கண் காக்கும் கருணை உடுமலை மகா மாரியம்மன்; கண் மலர் சாத்தி வழிபடும் பக்தர்கள்



உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய  வழிபாடு நடைமுறையில் உள்ளது. கோடையின் தாக்கத்திலிருந்து காக்கவும், மஞ்சள், வேப்பிலை, தீர்த்தம், தீச்சட்டி, எலுமிச்சை என நோய் தீர்கும் கிருமி நாசினிகளுடன் வழிபாடு நடத்துவதால், வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பிலிருந்து காக்கும் கருணை வடிவமாக மாரியம்மன் எழுந்தருளி வருகிறார். உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அம்சமாக, கண் நோய்கள் தீர்க்கும் கருணை வடிவம் கொண்டவராக எழுந்தருளி வருகிறார். அதனால், கண் நோய்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவும், கண் நோய்கள் தீர்த்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாகவும், கண் மலர் சாத்தும் பாரம்பரிய வழக்கம் இக்கோவிலில் உள்ளது. அம்மன் கண்களை போன்று, வெள்ளியினால் ஆன கண் மலர்களை, கோவில் மூலவர் கோபுர சுற்றுப்பிரகாரத்தில், மஞ்சள் தடவி, பக்தர்கள் கண் மலர் சாத்தி வருகின்றனர். இவ்வாறு, திருவிழாக்காலங்களில், பல ஆயிரம் கண் மலர்களுடன், ஆயிரம் கண் உடைய மகா மாரியம்மனாக காட்சியளித்து வருகிறார்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்