பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்



பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அருகே போடிபாளையம், குளத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில், பூமிதி திருவிழா கடந்த மார்ச், 31ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.  கடந்த, 1ம் தேதி இரவு, திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் தீர்த்தம் கொண்டு வந்து அம்மன் கொலு வைத்தல், கொடி மரம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கும்பம் முத்தரித்து விசேட பூஜைகள் துவங்கப்பட்டன. கடந்த, 4ம் தேதி பூவோடு எடுத்தலை தொடர்ந்து, புன்னிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், நிகழ்ச்சி  நடைபெற்றது. கடந்த, 12ம் தேதி புலிவேடம் அணிந்து ஆட்டுக்கிடா எடுத்தல், கடந்த, 13ல் புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று காலை, அம்மன் சப்பரத்தில் ஊர்வலம், மாலையில் தர்மராஜா கோவிலில் பச்சை போடுதல் நிகழ்ச்சி நடந்தது.   மாலை, 6:00 மணிக்கு பூக்குண்டம் திறப்பு விழா, இரவு, சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலம், குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை, மல்லிகை பூ உருண்டை குண்டத்தில் உருட்டிய பின், பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு  எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரட்டைக்கிடா வெட்டி சக்தி கும்பம் கங்கையின் விடுதலும்,  நாளை மஹா அபிேஷக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்