திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்



திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், தேர்த்திருவிழா நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. காலை 7:30 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க துவங்கினர். மலை அடிவாரத்தில் இருந்து துவங்கிய தேரோட்டம் வடக்கு, தெற்கு, கிழக்கு மாட வீதிகள் வழியாக உலா வந்து, மீண்டும் கோவிலை அடைந்தது. திருத்தேரோட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


 


 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்