திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்



திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில், பக்தர்கள், ‘வீரராகவா கோவிந்தா’ சரணத்துடன் தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோத்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோத்சவத்திற்கு பின், சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 4.20 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளினார். பின், காலை 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடு நடந்தது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக தேர் இழுக்கப்பட்டு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக, மீண்டும் நிலையை அடைந்தது.


இதில், ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் குவிந்து, ‘வீரராகவா கோவிந்தா’ சரணம் முழுங்க பெருமாளை வழிபட்டனர். தேரில் இரவு வரை அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், இரவு திருமஞ்சனம் நடந்த பின், கோவிலுக்குள் பெருமாள் திரும்பினார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று, மாலை திருப்பாதம்சாடி திருமஞ்சனம், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை, தீர்த்தவாரி, இரவு விஜயகோடி விமான சேவை நடைபெறும். நாளை மறுநாள், கண்ணாடி பல்லக்கு மற்றும் பிரம்சோத்சவம் நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்