பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியில் உள்ள, கருப்பராயசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, கடந்த மாதம், 22ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, நந்தா தீபம் ஏற்றுதல், கட்டளை பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நேற்றுமுன்தினம், காலை, 6.00 மணி முதல், பொங்கல், மாவிளக்கு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு, 7:00 மணிக்கு, முக்கிய வீதிகள் வழியாக, திருத்தேர் திருவீதி உலா நடந்தது. இதில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு கிராம சாந்தி நடந்தது.