அவிநாசி : திருமுருகன்பூண்டி வெற்றிவேல் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் 17ம்ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சி, வெற்றிவேல் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் 17ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்துஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் பூச்சட்டி எடுத்தும் கோவிலுக்கு சென்றனர். விழாவை முன்னிட்டு, வெற்றிவேல் நகர் விழா கமிட்டிசார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.