புதுச்சேரி; புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவிதாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் 1ம் தேதியான இன்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றி 27 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து காத்திருந்து பெருமாளை வழிபட்டு சென்றனர்.