பரவை சந்தன மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா



வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோயில் 44ம் ஆண்டு உற்ஸவ விழா மே 6ல் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே 12 திருவிளக்கு பூஜை, 13ல் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம், சின்னையா மற்றும் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடும், அன்று மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கரகம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவிளக்கு எடுத்தனர். 14ல் அம்மனுக்கு பொங்கல் வைத்து, வைகை ஆற்றில் இருந்து அக்னிசட்டி, பால்குடம் எடுத்துவந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை சத்தியமூர்த்தி நகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்