இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் குடமுழுக்கு விழா துவக்கம்; யானை மீது புனித தீர்த்தம் ஊர்வலம்



தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் யாகசாலை பூஜைக்கு ஆயிரம் கும்பங்கள் தயார் நிலையில் உள்ளது. யாகசாலையில் வைப்பதற்கு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், இன்று செண்டை மேளம் முழங்க, யானை மீது அமர்ந்த சிவாச்சார்யார்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை யாகசாலை பூஜை  தொடங்குகிறது. இந்த யாக சாலை பூஜைக்காக ராஜகோபுரம் அருகே  8000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  ஆயிரம் கும்பங்கள் வைத்து யாகசாலையில் பூஜை செய்யப்படுகிறது. இதையொட்டி யாகசாலையில் வைக்கப்படக்கூடிய கும்பக்களுக்கு கலர் நூல் சுற்றி, புனித நீர் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் யாகத்திற்க்கு பயன்படுத்தக்கூடிய வசம்பு, திப்பிலி, வெள்ளை மிளகு. ரோஜாமொக்கு, கருங்காலிநறிபயிறு, கடல்பாசி, மரிக்கொழுந்து, கருப்பு எள் .கருஞ்சீரகம், நவ தானியங்கள் மூலிகைகள்  உள்ளிட்டஉள்ளிட்ட 108 வகை பொருட்கள் , ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பல வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய தீபாராதனை தட்டு உள்ளிட்ட பூஜை பொருள்கள் பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலையில் வைப்பதற்கு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், இன்று செண்டை மேளம் முழங்க, யானை மீது அமர்ந்த சிவாச்சார்யார்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


இந்த யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள் பூஜையில் ஈடுபடுகின்றனர். இன்று மாலை தொடங்கும் யாகசாலை பூஜை 7 நாட்கள் தினமும் காலை மாலையில் நடைபெறுகிறது. 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்