பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது.
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் யானைகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஜீவதானம் எனும் பெயரில், புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். யானைகளின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக கடந்த 35 ஆண்டுகளாக தேவஸ்தானம் இந்த முகாமை நடத்தி வருகின்றன. நடப்பாண்டுக்கான முகாம், புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில், இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் துவக்கி வைத்தார். "விநாயகன் என்ற யானைக்கு, மூலிகை உணவு வழங்கினார். "ஜீவதானம் சிறப்பு குழு உறுப்பினர்களள் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிரசாம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் யானைகளுக்கு வழங்கப்படும். இதற்காக தேவஸ்தானம், 12.5 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.