ஆஷாட நவராத்திரி ; கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு



பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. கோயிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் உள்ளார். ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 26 தொடங்கி ஜூலை 5 வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளை அர்ச்சகர் செந்தில்முருகன் நடத்தி வைக்கிறார். மேலும் மாலை 6:00 மணிக்கு வராகி, சந்தன காப்பு, மஞ்சள் காப்பு, மகாலட்சுமி, வெள்ளி கவசம் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றி அருள்பாலிக்கிறார். ஜூலை 5 காலை 8:30 மணி தொடங்கி யாக வேள்வியும், அபிஷேகம் நிறைவடைந்து, அன்னதானம் நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்