கடலுார் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா



கடலுார்; கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா இன்று நடந்தது.


கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தில் பூரணி, பொற்கலை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா இன்று நடந்தது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின், 10:00 மணிக்கு யாகசாலையில் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து 11:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி சுவாமிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்