திருப்பதி லட்டு செய்ய பயன்பபடும் நெய்யில் கலப்படம் என்ற பிரச்னை பற்றி எரிந்த போது விரைவில் தரச் சோதனை ஆய்வகம் திருமலையிலேயே நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்நது அதன் அடிப்டையில் தற்போது புதிய ஆய்வகம் திருமலையில் துவக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரசாதம் மற்றும் நெய் போன்ற பொருட்களின் தரத்தை அறிய பிற மாநிலங்களுக்கு அனுப்பி காத்திருக்கவேண்டியிருந்தது,அதில் சில பிரச்னைகளும் இருந்தது இப்போது இது தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த ஆய்வகம் தீர்வாக அமையும். ஆய்வகத்தில் கேஸ் குரோமோட்டோகிராப்,ஹை பெர்பாமன்ஸ் லிக்விட் குரோமோட்டோகிராப் போன்ற உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை நெய்யின் கலப்புச் சதவீதம் மற்றும் தரத்தைக் களையிலேயே பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவையாகும்.ஆய்வக பணியாளர்கள் மைசூரிலுள்ள இதற்கென சிறப்பு பயிற்சி பெற்றுள்ளதால், இனி பிரசாதங்களின் தரத்தை உடனுக்குடன் இவ்வாய்வகத்தில் பரிசோதித்து முடிவுகளை எடுக்கப்படும்.ரூ.75 லட்சம் மதிப்புள்ள இந்த உபகரணங்களை குஜராத் மாநில தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நன்கொடையாக வழங்கியுள்ளது.