கூடலுார்; மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பழ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேல் கூடலுார் சந்தக் கடை மாரியம்மன் கோவில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை இன்று நடந்தது. காலை சிறப்பு ஹோமம் பூஜை நடந்தது. தொடர்ந்து, பழங்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அரும் பாலித்தார். ஆடி கடைசி வெள்ளி என்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை விளக்கு பூஜை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.