மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி, இன்று கிருஷ்ணஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெண்கள், வீடுகளின் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, கிருஷ்ணர் பாத கோலம் இட்டு, கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், தயிர், பால், அவல், சீடை, முறுக்கு போன்றவற்றை படைத்து வழிபட்டனர். சிறுவர், சிறுமிகள் ராதை, கிருஷ்ணன் வேடம் அணிந்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, அனைத்து பகுதியில் உள்ள பெருமாள் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. உடுமலை நவநீதகிருஷ்ணன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இஸ்கான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் லலித்தா, கிருஷ்ணா, ராதா, விஷாகா அருள்பாலித்தனர். திருத்தணி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன.