காக்கநல்லுார் பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம்



உத்திரமேரூர்; காக்கநல்லுார் பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் கிராமத்தில் பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான ஆவணி மாதத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. காலை 8:30 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். காலை 10:00 மணிக்கு, மூலவர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு பெரியநாயகி தாயாருக்கும், பெரியாண்டவருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்