கோவில் குளத்தை சீரமைக்க தொழுவூர் மக்கள் வலியுறுத்தல்



தொழுவூர் ஊராட்சியில் பொன்னியம்மன் குளத்தை சீரமைத்து, சுற்றி வேலி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது தொழுவூர் ஊராட்சி. இங்குள்ள பொன்னியம்மன் கோவில் எதிரே பொன்னியம்மன் குளம் உள்ளது. இந்த குளத்து நீரை பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.


இந்த குளம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாயில் துார்வாரி சீரமைக்கப்பட்டது. தற்போது, போதிய பராமரிப்பின்றி, குப்பை கொட்டப்பட்டு ஆகாய தாமரை படர்ந்துள்ளது. மேலும், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள இக்குளத்திற்கு வேலி இல்லாததால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.


எனவே, மாவட்ட நிர்வகம் பொன்னியம்மன் குளத்தை சீரமைக்கவும், சுற்றி வேலி அமைக்கவும் நடவடிக்கை வேண்டும் என, தொழுவூர் ம க்கள் எதிர்பார்க்கின்றனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்