கோவை; வெள்ளலூர் மகாலிங்கபுரம் மாணிக்க விநாயகர் கோவிலில் புதிதாக வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தாார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.