செஞ்சி; செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை – நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் இன்று சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும், 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும். 7 மணிக்கு சிறப்பு தரிசனமும் நடந்தது. காலை 10 விசேஷ ஹோமமும், 11 மணிக்கு மோன சித்தருக்கு சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலசாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 12 மணிக்கு மகேஸ்வர பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சிவஜோதி மோன சித்தர் பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதமும் வழங்கினர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் நடந்தது.