திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம்



திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து வழிபட்டார்.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணிவிழா வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகரேஸ்வரர் கோவிலில் இன்று ஆயுள் மற்றும் ருத்ர ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார். இதையொட்டி கோவில் பிரகாரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ஹோமம் நடத்தப்பட்டு அங்கு கடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு குரு மகா சன்னிதானத்திற்கு கலசபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கிய குரு மகா சன்னிதானம் கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை கொடுத்து அருளாசி வழங்கினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்