திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலின் உபகோவிலான சொக்கம்மன் கோவில் கிரிவலப்பாதை பாறை குன்றில் அமைந்துள்ளது. சொக்கம்மனை, பக்தர்கள் பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் கிரிவலம் செல்லும் போது தரிசித்து வணங்குகின்றனர். இக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமி கிரிவல நாளான நேற்று, 12வது வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, மாலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் பூப்பந்தல் அலங்காரத்திலும், சொக்கம்மன் மீனாட்சி அம்மன் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.