திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களின் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.