பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்த குடம் எடுத்து வருதல், புற்றுமண், முளைப்பாரிகை, சகல மேலதாளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், முதல் கால யாக வேள்வி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்விகள், மூல மந்திர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாம பூஜைகள் நடந்தது. காலை, 6:10 மணிக்கு விமான கோபுர கும்பாபிேஷகம், மூல மூர்த்தியான உச்சி மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி. ஈஸ்வரசாமி, கொ.ம.தே.க. துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மஹா அபிஷேகம், தச தரிசனம், தச தானம், சர்வ அலங்கார மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.