ஆர்.எஸ்.மங்கலம்; வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கடலின் சீற்றம் காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் கடல் நீரில் மூழ்கின.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இதைய முக்கியத்துவம் வாய்ந்த நவகிரகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை பக்தர்கள் எளிதாக சுற்றி வந்து தரிசனம் செய்யும் வகையில் நவக்கிரகங்களுக்கு செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால், கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை தரிசனம் செய்த பக்தர்கள் எளிதாக சென்று வரும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கடலில் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடலில் நீர்மட்டம் உயர்ந்து, நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியதால், நவக்கிரகங்களை கடல் நீரில் இறங்கி சுற்றி வந்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடைமேடையில் இருந்தவரே பக்தர்கள் நவக்கிரகங்களை தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று காலை முதல் கடல் நீர் உயர்வின் காரணமாக நவக்கிரகங்கள் மூழ்கின. இதில் சனி, ராகு, கேது, செவ்வாய் செவ்வாய் ஆகிய கிரகங்கள் மட்டுமே லேசாக வெளியில் தெரிந்தன. மற்ற சுப கிரகங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியிருந்தன. இதனால் சுக கிரகங்களை வழிபட முடியாமல் பக்தர்கள் பாதிப்படைந்தனர். இயற்கை சீற்றம் காரணமாக கடலில் மாற்றங்கள் ஏற்படும் போது, கடல் நீர் உயர்ந்து நவக்கிரகங்கள் முழுவதும் முழுவதும், கடல் சீற்றம் குறைந்த பின்பு கடல் நீர் இறங்குவதும் அவ்வப்போது ஏற்படும் மாற்றம் என பக்தர்களிடம் அப்பகுதியினர் தெரிவித்தனர்.