அறுபடை வீடு ஆன்மிக பயணம்; குன்றத்திலிருந்து இருந்து 200 பக்தர்கள் புறப்பாடு



திருப்பரங்குன்றம்; மதுரை, சிவகங்கை மண்டலங்களைச் சேர்ந்த 200 பக்தர்கள் அறுபடை வீடு ஆன்மிக பயணத்தை இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து துவக்கினர்.


அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 200 பக்தர்கள் இன்று காலை திருப்பரங்குன்றம் வந்தனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் சார்பில் அவர்கள் காலை உணவு வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் பயணத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் இன்று பழமுதிர் சோலை, திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து திருச்செந்தூரில் தங்குகின்றனர். திருச்சியில் தங்கும் பக்தர்கள், நவ. 27ல் சுவாமிமலை, திருத்தணி கோயில்களில் சுவாமி தரிசனம் முடித்து அங்கு இரவு தங்குகின்றனர். நவ. 28ல் பழனி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வீடு திரும்புகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்