பெண்ணாடம்: அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெண்ணாடத்தில் அய்யனார் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை 4:30 மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8:30 மணிக்கு நாடி சந்தானம், 7:30 மணிக்கு மகா தீபாராதனை, 10:00 மணிக்கு யாத்ராதானம், 10:20 மணிக்கு கடம் புறப்பாடு; 10:30 மணியளவில் அய்யனார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, கருப்புசாமி, பாவாடைராயன், சப்த கன்னிகள் சிலைகளுக்கு புனிநீர் ஊற்றப்பட்டது.