கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.