மாமல்லபுரம் கோவில்களில் மார்கழி வழிபாடு துவக்கம்

17-டிசம்பர்-2025



மாமல்லபுரம்: சைவ, வைணவ கோவில்களில், மார் கழி மாத வழிபாடு துவங்கியது.


மார்கழி மாதம், நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. மார்கழி மாதம், காலை 9:30 மணிக்கு துவங்கிய போது, ஸ்தலசயன பெருமாளுக்கு பள்ளியெழுச்சி சேவையாற்றினர். பெருமாள், நிலமங்கை தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு, திருப்பாவை பாசுரங்கள் பாடினர். மல்லிகேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பாடல்கள் பாடி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பக்த பஜனை குழுவினர், சிறப்பு வழிபாடு நடத்தி, வீதிகளில் தீபம் ஏந்தி திருப்பாவை பாசுரங்கள் பாடி, சுவாமிக்கு சாற்றுமறை சேவையாற்றினர். திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நாலாயிர திவ்ய பிரபந்த சேவையாற்றினர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தனுர் மாத பூஜை வழிபாடு துவக்கப்பட்டது. மார்கழி முழுதும் தினமும் அவ்வாறே நடைபெறும். சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள், கூவத்துார், திருவாலீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்களிலும் திருவெம்பாவை, திருப்பாவை சேவையுடன் வழிபாடு நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்