திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா துவக்கம்



திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பழநி பாதயாத்திரையை முன்னிட்டு தைப்பூச விழா துவங்கியது.


இக்கோயிலில்  சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இக்கோயிலி்ல் கார்த்திகையில் விரதம் துவங்கி பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தைப்பூச விழா கொண்டாடுகின்றனர். டிச.25 ல் மூலவருக்கு அபிஷேகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. டிச.31 மாலையில் கார்த்திகை சிறப்பு அபிஷேகமும், ஜன.8 ல் சஷ்டி சிறப்பு அபிஷேகமும், ஜன.9ல் திருவிளக்கு பூஜையும், ஜன.13ல் 108 சங்காபிஷேகமும் நடைபெறும்.ஜன.18 ல் முருகப்பெருமானுக்கும்,வெள்ளி வேலுக்கும் சிறப்பு அபிஷேகம்,அன்னதானம் நடைபெறும். ஜன.24ல் சஷ்டி சிறப்பு அபிேஷகமும், ஜன.26ல் பழநிக்கு பக்தர்கள் யாத்திரை புறப்பாடும், ஜன.27 ல் கார்த்திகை பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகமும், பிப்.1ல் தைப்பூச சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்