அரியக்குடி கோயிலில் டிச. 30ல் சொர்க்கவாசல் திறப்பு



காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிச. 30ல் நடை பெறுகிறது.


அன்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, நித்தியபடி பூஜை முடிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6:00மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளு வார்.


காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.


முன்னதாக டிச.29 மாலை 6:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி யளிப்பார்.


விழா ஏற்பாடுகளை, சிவகங்கை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பரம்பரை அறங்காவலர் மீனாட்சி, செயல் அலுவலர் ராமநாதன் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்