மனத்துாய்மைக்கு இறை பக்தி தேவை - திருச்சி கல்யாணராமன் தொடர் சொற்பொழிவு



அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.


ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:


எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடன் இருப்பவர்களையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் கைவிடக்கூடாது. எந்த நிலையிலும் இறைவனை வழிபட்டு பக்தியை கைவிடாமல் தொடர்பவர்களை இறைவன் நல்வழி படுத்துவான். இறைவனின் மனதில் பாகுபாடுகள் கிடையாது. அனைவரின் வழிபாட்டுக்கும் ஒரே விதமான அருளைத்தான் இறைவன் புரிவான்.


ஆன்மாவை அழிவில்லாமல் மனத்துாய்மையுடன் வைத்திருக்க இறை பக்தி தேவை. நாம் நல்லது ஒருவருக்கு செய்தால் அதன் பயன் ஏழு பிறவிகளையும் கடந்து காப்பாற்றும். ஒருவருக்கு தீமை செய்ய வேண்டாம். நினைத்தாலே அதற்கு உண்டான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்