ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்



ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று துவங்கியது.


நேற்று காலை 9:30 மணிக்கு மேல் கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய ஆண்டாள் மாட வீதிகள் வழியாக ராஜகோபுரம் எழுந்தருளினார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம், அரையர் சேவை நடந்தது. பின்னர் மண்டபங்கள் எழுந்தருளி ரத வீதி சுற்றி மதியம் 1:00 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் வந்தடைந்தார். அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை, பத்தி உலாவுதல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் புறப்பாடாகி ரத வீதிகள் வழியாக எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள் செய்தனர். ஜன., 14 வரை தினமும் காலை ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மதியம் எண்ணெய் காப்பு உற்ஸவம், இரவு மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது. ஜன., 15ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜன., 16 ல் பெரியாழ்வார் சன்னதியில் கனு, முத் துக்குறி வைபவம் நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்