ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு மேல் வெள்ளி குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருளினர். அப்போது அரையர் அருளிப்பாட்டுடன் துவங்கிய நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி காலை வரை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை யம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.