​‘அப்பரும், திருநாவுக்கரசரும் சைவத்தின் கண்கள்’: திருமந்திர தொடர்சொற்பொழிவு



திருப்பூர்: ‘‘சைவத்தின் கண்களாக இருந்து, திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழால் வளர்த்துள்ளனர்,’’ என, தருமை ஆதீன புலவர் பாலறாவாயன் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், ‘மார்கழி அருள்மழை’ என்ற திருமந்திர தொடர்சொற் பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. கொங்கு வேளாளர் மெட்ரிக், வித்ய விகாசினி பள்ளி குழந்தைகளின் திருமுறை இசைப்பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், சபரி கோல்டு அண்ட் டைமண்ட் உரிமையாளர் முத்து நடராஜன், சைவ பேராசிரியர் சிவசண்முகம் முன்னிலை வகித்தனர். 


தருமை ஆதீன புலவர் முனைவர் பாலறாவாயன், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: கொங்கு மண்டலம், சைவம் வளர்ப்பதில் முன்னோடியாக இருப்பதால் தான் தொழில் வளம் பெற்ற செழுமையான பகுதியாக இருக்கிறது. கொங்கு ஆடல் வல்லான் அறக்கட்டளை மூலமாக, 7,000 பள்ளி குழந்தைகள் திருமுறை பயிற்சி பெறுவது பாராட்டுக்குரியது. இந்தியாவிலேயே, தமிழகம் தான், தமிழால் சைவத்தை வளர்க்கிறது. சைவ மரபில் வந்தவர்களால், திருப்பூர் வளர்கிறது. உறுப்புகளில் சிறந்தது கண் தான் என்று அறநுால்கள் கூறுகின்றன. உடலில் எந்த உறுப்பு பாதித்தாலும், கண்ணில் இருந்து தான் கண்ணீர் வரும். சைவத்தின் கண்களாக இருந்து, சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வளர்த்துள்ளனர்; சைவத்தின் இரு கண்களாக விளங்கி, தமிழலால் சைவத்தை வளர்த்தனர். ஞானசம்பந்தர் பதிகம் சூத்திரம் போல் இருக்கும். திருநாவுக்கரசரின் பதிகங்கள் விளக்கவுரை போல் இருக்கும். தேவாரம் பாடியவர்கள் சிவனை மட்டுமே பாடியுள்ளனர். சுந்தரர் மட்டுமே சிவசக்தியாக பாடியுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்