காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட குருவாயூரப்பன் சிலையை மடாதிபதிகளிடம், காணிக்கையாக வழங்கினார்.
சென்னையை சேர்ந்த ஜெயராமன் என்ற பக்தர் 2 அடி உயரத்தில் குருவாயூரப்பன் ஐம்பொன் சிலையை காஞ்சி புரம் சங்கரமடத்திற்கு காணிக்கை வழங்க முடிவு செய்தார்.
அதன்படி, கும்பகோணத்தில் புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை, காஞ்சி புரம் சங்கரமடத்திற்கு கொண்டு வந்து, மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காணிக்கையாக வழங்கி ஆசி பெற்றார்.
மடாதிபதிகள் குருவாயூரப்பன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். சங்கரமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாதசாஸ்திரி ஆகியோர் உடனிருந்தனர்.