ஏகாம்பரநாதர் கோவிலில் வெயிலில் நிற்கும் பக்தர்களுக்கு பந்தல் அமைக்க கோரிக்கை



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெயிலில் நிற்கும் பக்தர்களுக்கு நிழல் தரும் பந்தல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் செலவில், திருப்பணி முடிந்து, கடந்த டிச.8ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இலவச தரிசனம், 100 ரூபாய் சிறப்பு தரிசனம் என, இரு வழிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இரு வழிகளிலும் கூட்ட நெரிசல் உள்ளது. வெளியே உள்ள ராஜ கோபுரம் வரை, பக்தர்கள் வரிசை நீண்டு நிற்கிறது. இந்நிலையில், மாட்டுப்பொங்கல் பண்டிகையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கோவிலில் குவிந்தனர். பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் வளாகத்தில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. வெயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சிரமப்பட்டு நிற்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், நிழல் தரும் பந்தல் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். முதியோருக்கு சிறப்பு வழிகளை அமைக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்