தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழர் கலை, கலாசார ஊர்வலம் மற்றும் திருவள்ளுவர் தேர் பவனி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் நடந்தது.
ஊர்வலத்திற்கு தமிழ் சங்கத்தின் தலைவர் கலையரசன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கமல் முனிசாமி வரவேற்றார். ஸ்ரீதர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். திருவள்ளுவர் கொடியை ரஞ்சித் குமாரும், வி.சி.நடராஜனும் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்தனர். திருவள்ளுவர் சிலைக்கு தருமன், டாக்டர் இங்கர்சால், நகராட்சி முன்னாள் தலைவர் வி.முனிசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். அ.ஜெயசீலன், பிரதாப் குமார், இருதயராஜ், எல்.கருணாகரன், தீபம் சுப்ரமணியம், கருணாமூர்த்தி ஆகியோர் திருக்குறள் ஓதினர். தமிழ் பண்பாட்டு நடனங்களும், வீர சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. விழா நிகழ்ச்சிகளை ஆர்.பிரபுராம் தொகுத்து வழங்கினார். தமிழறிஞர்களான, ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்-, தினத்தந்தி ஆதித்தனார் உள்ளிட்ட பலரின் படங்களும் திறந்து வைக்கப்பட்டன. கர்நாடக மாநில தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார், மோகன் கிருஷ்ணா, மார்கிரேட் ஆகியோர் திருவள்ளுவர் தேர் பவனியை துவக்கி வைத்தனர். தங்கவயலின் அனைத்து கட்சி பிரமுகர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.அன்பரசன், ஆர்மிமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.