மானாமதுரை கோயிலில் புதிய தேருக்கு விரைவில் வெள்ளோட்டம்



மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டு வரும் தேருக்கு விரைவில் வெள்ளோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேரடியை மராமத்து செய்வதற்காக பழைய தேர் இடமாற்றம் செய்யப்பட்டது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது இரண்டு பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் ஒரு தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போதுள்ள பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும் புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆனந்தவல்லி அம்மனுக்கும் புதிதாக தேர் செய்யும் பணிகள் நடைபெற்று தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் புதிய தேருக்கான வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. கோயில் முன்பாக பழைய பெரிய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேரடி தளம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அதனை மராமத்து செய்வதற்காக அர்ச்சகர்கள் ராஜேஷ்,குமார் தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டு தேரை மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிரே உள்ள காலி இடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. மராமத்து பணிகள் முடிவடைந்த உடன் புதிய தேருக்கு பின்னால் பழைய தேர் நிற்பதற்கான பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்