பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவடைந்தது.
பழநி திருஆவினன்குடி கோயில் முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025 ஜூன், 16.,ல் கும்பாபிஷேகத்திற்கு பாலாலயம் நடைபெற்றது. நவ.5.,ல் முகூர்த்த கால் நடுதல், டிச.1ல் கோயிலின் 19 விமான கலசங்கள் சிறப்பு பூஜைக்கு பின் பொருத்தப்பட்டன. டிச.,4ல் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 2025, டிச.,8ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.21) மாலை மண்டல நிறைவு பூஜையை முன்னிட்டு முதற்கால யாகம் துவங்கியது. இன்று (ஜன.22) இரண்டாம் கால பூஜை நடைபெற்றது யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கோயில் வெளிப்பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு உச்சிக்கால பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உடன் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் லட்சுமி,கண்காணிப்பாளர் ராஜா, அழகர்சாமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.