குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம்



காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத்தையொட்டி இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஜன. 23 ஆம் தேதி அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தினமும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்