தைப்பூச திருவிழா திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் ஐந்து தேரோட்டம்



தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது.  இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை சுவாமிகள் பல்வேறு வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஜன.31) அதிகாலை 3:30 மணிக்கு மேல் 4;30 மணிக்குள் பஞ்சமூர்த்தி சுவாமிகளான மகாலிங்க சுவாமி, பெருநலமாமுலையம்மை அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளினர். பிறகு தேரில் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை (பிப்.1 தேதி) காலை 10:30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபா வாகனத்தில் காவிரி ஆற்றுக்கு எழுந்தருளி மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் தைப்பூச தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரத காட்சி நடைபெறுகிறது.

பிறகு (பிப்.2ம் தேதி ) சந்தாவர்ணம், சுவாமி அம்பாள் திருவீதியுலா, 3ம் தேதி சக்தி உற்சவம், 4ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் திருவீதியுலா,5ம் தேதி  ஆச்சார்யா உற்சவம், சர்வ பிராய சித்தாபிஷேகம், பஞ்சமூர்த்திகள் பிரவேசம் நடைபெறுகிறது. இதை போல், தைப்பூசத்தையொட்டி ஆறுபடை வீடுகளுள் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றப்பட்டன. தொடர்ந்து இன்று உள்பிரகார திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி-தேவசேனா உடனாய சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை (பிப்.1 தேதி) சுவாமிகள் திருவீதியுலாவாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, இரவு அவரோகணம், படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா, நாளை மறுநாள் (பிப்.2ம் தேதி) இரவு சுவாமிகள் யதாஸதானம் சேருதல் நடைபெறுகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்