பொள்ளாச்சி: பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த, 18ம் தேதி, யாக சாலை முகூர்த்த கால் இடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 28ம் தேதி மாலை, 3:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வர புறப்படும் நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் மாலை, 3:00 மணிக்கு தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
மாலை, 4:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல் நடைபெற்றன. மாலை, 6:30 மணி முதல் முதற்கால வேள்வி, திருமஞ்சானஹுதி, 108 மூலிகை திரவியாஹுதி, வேள்வி நிறைவு உள்ளிட்ட பூஜைகளும், எண்வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாட்டனர். காலை, 9:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது.