சாத்தூரில் இருந்து 47 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு 700 கி.மீ., சைக்கிள் யாத்திரை



காரைக்குடி; சாத்தூரைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக, உலக நன்மை வேண்டி வேளாங்கண்ணிக்கு 350 கி.மீ., சைக்கிள் யாத்திரை சென்று வருகின்றனர்.


சாத்தூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் புத்தாண்டு பிறந்ததும் வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சைக்கிளில் சாத்தூருக்கு திரும்புகின்றனர். கடந்த 47 ஆண்டுகளாக இந்த சைக்கிள் பயணத்தை செய்து வருகின்றனர். உலக நன்மை வேண்டி 40க்கும் மேற்பட்டோர் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பக்தர்கள் கூறுகையில்; சாத்தூர், இருதய ஆண்டவர் சர்ச்சில் இருந்து வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் யாத்திரையை தொடங்கினோம். கடந்த 47 ஆண்டுகளாக யாத்திரை செய்து வருகிறோம். பிப்.3 ம் தேதி 50 பேர் யாத்திரையை தொடங்கினோம். சாத்தூர் அருப்புக்கோட்டை நரிக்குடி மானாமதுரை சிவகங்கை காரைக்குடி வழியாக பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி சென்றடைவோம். ஆலயத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் சைக்கிளிலேயே திரும்புவோம். யாத்திரை சென்று திரும்ப 700 கி.மீ., வரை ஆகும். வருடம் தோறும் வருவதால் பலர், தாங்களாகவே முன்வந்து எங்களுக்கு உணவு தங்குவதற்கு இடம் அளித்து உதவி செய்கின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்