சனிப் பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ல் மகா யாகம், மகர கும்ப தீப தரிசனம்



புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது. இதில் பங்கேற்க முன்பதிவு நடைபெற்று வருகிறது.


நவக்கிரகங்களில் ஒன்றான சனி பகவான் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இச் சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் மற்றும் 80 அடி உயர மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது. இதற்காக, இக்கோவிலில் அமைந்துள்ள 80 அடி உயர கும்பத்தில், 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி, 800 கிலோ எள்ளை, 800 மீட்டர் காடா துணியில் கட்டி, 80 கிலோ கற்பூரம் கொண்டு, 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக பக்தானுக்கரக மகா சனீஸ்வரர் எதிரில் உள்ள மகர வாயில் கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு கிலோ எள், ஒரு மீட்டர் காடா துணி, ஒரு கிலோ கற்பூரம், பூஜை பொருட்கள் மற்றும் தட்சணை என, ரூ.3,000 ஐ கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்