எச்.ராஜா நலம் பெற வேண்டி தாயமங்கலம் கோயிலில் பா.ஜ.,வினர் வழிபாடு



இளையான்குடி; பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டபோது மயக்கமடைந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து அவரை ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்ற நிலையில் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜபிரதீப் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் எச்.ராஜா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அர்ச்சனை செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்