பாதாள செம்பு முருகன் கோயிலில் கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம்



ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சமீபத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உத்தரப்பிரதேச அணியை தமிழ்நாடு அணி வென்று ஒ.எல்.சி.கே., நாயுடு கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் தத்தம் கல்லுாரியில் பிப். 6 முதல் 9 வரை நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணி, திரிபுரா அணியை எதிர்கொள்ள உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நெட்டியபட்டியை சேர்ந்த தமிழக அணி கேப்டன் பூபதி வைஷ்ணவ் குமார் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு வந்தனர். வளாகத்தில் உள்ள சங்கிலி கருப்பணசுவாமியை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கருங்காலி மாலை அணிந்து வழிபாடு செய்தனர். இதன் பின் பாதாள செம்பு முருகனை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் வீரர்களுக்கு பரிவட்டம் கட்டி மாலை மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அணி தலைமை பயிற்சியாளர் குரு கேதார்நாத், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்