கோவை; காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது.இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் 106 ஆம் ஆண்டு தைப்பூசத் திருத்தேர் பெருவிழாவையொட்டி கடந்த 4 நாட்களாக பால் குடம் எடுத்தல், சாமி அழைப்பு, வள்ளி முருகன் திருக்கல்யாணம், திருத்தேர் விழா, காவடியாட்டம், சுவாமி திருவீதி உலா என பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து மறுபூஜையுடன் இன்று விழா நிறைவு பெற்றது. மறுபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.