கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி வைபவம்



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவின் நிறைவாக நேற்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன் உமாகவுரி சுவாமிகளான சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம்வந்து தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். மதியம் 1:30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் திரிசூலத்தில் ரிஷபாவுடன் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் புனித நீராடல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்