திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மகிழடி சேவை வெகு விமர்சை



சென்னை; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்ம உற்சவத்தின் முக்கியமான நிகழ்வான மகிழடி சேவை வெகு விமர்சையாக நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து கொண்டனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசிப் பெருவிழாவின் 8-ஆம் நாளில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வு மகிழடி சேவை ஆகும். இது மகிழ மரத்தடியில் தியாகராஜர் வடிவுடையம்மனுக்கு காட்சி தரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற மாசிப் பிரம்மோத்சவத்தின் முக்கிய விழாவானது இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்