திருப்பட்டினத்தில் மாசிமத்திருவிழா முன்னிட்டு தேர்திருவிழா



காரைக்கால்;  காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.

காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமப் பிரும்மோற்சவத் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் மாசிம ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சூரிய பிறையில் வீதியுலா, சந்திரபிறையில் வீதியுலா, பூதவாகனத்தில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் நிகழ்ச்சி நடந்தது.இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது.இரவு ஜடாயு இராணவ யுத்தம் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாசிமகா திருத்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.4ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சிறப்பாக செய்து வருகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்